Wednesday, November 2, 2022
Tuesday, November 1, 2022
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
கவிஞர். முத்துபாரதி – சுய விவரக் குறிப்பு
|
கல்வித்தகுதி : B.Com.,PGDBA., DEM., M.A.,MLIS., M.A.,( Ph D.,)
முகவரி : 83, ராயபுரம் பிரதான சாலை
திருப்பூர் - 641 601
96882 63329 - 86109 87533
மெயில் : tiruppurbharathi@gmail.com
FB : Muthu Baarathi
muthubaarathi.blogspot.com
பணி : நூலகர் மற்றும் உதவிப் பேராசிரியர் –
நிப்ட்-டீ - கல்லூரி, திருப்பூர்
குடும்பம் : மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள்
பிற ஈடுபாடுகள் நூல் வெளியீடு : இதுவரை 24 நூல்கள் வெளியீடு, 3 நூல்கள் தொகுப்பு .
(1). ‘முகங்கள்’ –( 2003 ல்) கவிதை (2).‘வல்லமை தாராயோ’–(2005 ல்) கவிதை ( 3). ‘நல்லதோர் வீணை’–(2007 ல்) கவிதை (4). ‘மௌனமாய்’– (2008) கவிதை (5). ‘கதம்பம்’– 2008 ல் ( சிறுகதை நாடகம்) (6). ‘பேசாத கடவுள்’ கவிதை (7). ‘சுட்டும் விழி’– கவிதை (8). “பெண்ணே நீ“ – மகளிர் தின கவிதைத் தொகுப்பு (9). ;சிகரம் நோக்கி’ –-2009ல் தன்னம்பிக்கை கட்டுரைகள் (10).. ;சுமைதாங்கி’ –கவிதை (11). ‘வன்கொடுமைத் தீர்வுகளும் வாழ்வியல் முறைகளும்’– வாழ்வியல் நூலை 2014ல் (12). தினமணி நாளிதழில் வெளிவந்த எனது கட்டுரைகளைத் தொகுத்து ‘அச்சம் தவிர்’ என்ற நூல் 31-07-2016 (13). ‘துப்புரவு’ எனும் நாவல் 2017ல் (14). ‘எச்சரிக்கை ! மனிதர்கள் நடமாடும் பகுதி’ எனும் சிறுகதை (15.) அந்த சில நாட்கள் - புதுதில்லி பயண அனுபவ கட்டுரை நூல் 2018ல் (16). ‘நூலகம் எனும் நண்பன்” -நூலகம் குறித்தான நூல் 2019ல் (17.) ‘போரா குகை – விசாகப்பட்டினத்தின் மர்மம் [ BORA CAVES – THE MYSTERY IN VISAKHAPATNAM] – விசாகப்பட்டினம் பயண அனுபவ கட்டுரை நூல் 20-9-2019 (18). திருப்பூர் படைப்பாளர்களும் படைப்புகளும் – 6-2-2020 (19.) விதிமுறைகள் யாருக்காக ??!! ( வாழ்வியல் வழிகாட்டி நூல் ) (20) . ஒட்டக சவாரி – ராஜஸ்தான் பயண அனுபவ நூல் (21) அவுட்டுக்காய் – காட்டுயிர்களுக்கான ஆதரவு குரல் (22) முத்துமாமாவின் கதைகள் – சிறுவர்களுக்கான சிந்தனைக் கதைகள் (23) உனக்குள்ளே ஒரு எதிரி – உளவியல் நூல் – 23-4-2021 (24) சாதிகள் தொல்லையடி பாப்பா – சமூக விழிப்புணர்வு நூல் – 21-7-2021 (25) என் பார்வையில் இறைவன் – பல மதத்தவர்களின் இறை அனுபவ தொகுப்பு 21-7-2021 (26) குடிமறக்கலாம் இனி – சமூக விழிப்புணர்வு நூல் – 23-4-20222 (27) கொரோனா ஒழிக – (முத்துமாமா கதைகள் – பாகம்-2) – சிறுகதை தொகுப்பு – 23-4-2022 (28 ) “அகதி“ – புலம்பெயர்ந்த மக்களின் வாழ்வியல் சம்பவங்களை உள்ளடக்கிய நாவல் – அக்.30, 2022 .
பிறஈடுபாடுகள் : இரத்ததானம் : இதுவரை 12 முறை
கண் மற்றும் உடலுறுப்புகள் தானம் தர ஓப்புதல்
மனவளக்கலையில் : அருள்நிதி (ஆசிரியர்) பயிற்சி – ஏப்ரல் 2006
உலகத்திருக்குறள் பேரவை –திருப்பூர் மாநகரம்
:TAMILNADU POLICE TRAFFIC WARDEN அமைப்பில் 2005 முதல் சேவை. தற்போது SPO – RSP ( SENIOR PLANNING OFFICER and In-charge for RSP - Road Safety Patrol ) டிராபிக் வார்டன் போக்குரத்து சீரமைப்பு பணியை சிறப்பாக செய்தமைக்கு சிறந்த போக்குவரத்துக் காப்பாளர் ஊக்க சான்றிதழ் 2008 ல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமிருந்து ( திரு. கார்த்திகேயன், ஐபிஎஸ் ) பெற்றுள்ளார். சாலைபாதுகாப்பு குறித்து சிறப்பாக மாணவ, மாணவிகளுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும், 2016ல் மாவட்ட ஆட்சியரிடமிருந்து( திருமதி. ஜெயந்தி, ஐஏஎஸ்) ‘சிறந்த போக்குவரத்து காப்பாளர்’ ஊக்க சான்றிதழ் பெற்றுள்ளார். 2018 ல் குடியரசுதின அணிவகுப்பில் அணியை திறம்பட நடத்திச் சென்றதற்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர். கே.எஸ். பழனிசாமி அவர்களிடம் பாராட்டுதல் பெற்றுள்ளார்.
சார்ந்துள்ள அமைப்புகள் உலகத் திருக்குறள் பேரவை, திருப்பூர் மக்கள் மாமன்றம், கிரீன் அன் கிளீன் பசுமை பாதுகாப்பு இயக்கம். தமிழ்நாடு தமிழ்ச்சங்க திருப்பூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்.
நடவு சமூக நல மையம் என்கிற அமைப்பு மூலம் அரசு பள்ளிகளுக்குத் தேவையான சில அடிப்படை வசதிகளை செய்து வருகிறார்.
தனது நூல் நடவு பதிப்பகம் என்கிற பதிப்பகம் மூலமாக அச்சிட்டு வெளியிடுகிறார்.
2020 ஆகஸ்ட் – 15 முதல் “திருப்பூர் சிந்தனை வட்டம்“ என்கிற புதிய அமைப்பினை ஆரம்பித்து சமூக அக்கறையுள்ள மனிதர்களை ஒருங்கிணைத்து “மாணவர்களுக்கு வழிகாட்டும்“ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
சார்ந்துள்ள முன்னாள் மாணவர் அமைப்புகள்: நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி, மற்றும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, திருப்பூர்
பெற்ற விருதுகள் : “கவியருவி” ‘கவிச்சுடர்’ ‘சமூகநலசிற்பி’ ;மீனாட்சி சுந்தரனார் விருது – ‘கவிப்பெருமணி’ ‘சாதனையாளர் விருது’ “மொழிச்சிற்பி விருது“ “தமிழார்வலர் விருது“
கல்லூரி நூலகத்துறை சார்பில் “குறிஞ்சி“ எனும் மாணவர் இதழின் எடிட்டராக இருந்து மாணவர்களின் படைப்புகளை ஊக்குவித்து வருகிறார்.
15-11-2008 கோவை வானொலியில் படித்ததில் பிடித்தது நிகழ்வில் ‘டாலர்சிட்டி’ என்ற தொகுப்பு நூலில் வெளியான இவரின் கவிதை சிறப்பித்து பேசப்பட்டது.
பிற ஈடுபாடுகள் : சன் டிவி யில் சாலமன் பாப்பையாவுடன் பட்டிமன்றத்தில் பேசியது ‘கல்யாணமாலை’ நிகழ்ச்சிக்காக.( 2007 )
கோவை வானொலியில் ‘இளையபாரதம்’ நிகழ்ச்சியில் பங்கேற்றது. இவரின் கவிதை,நாடகம், பாடல் ஒலிபரப்பாகியது. (1991) மற்றும் இலக்கியச்சோலை நிகழ்ச்சியில் பங்கேற்று கவிதை வாசித்தது (2008).
16-5-2019 ல் கோவை வானொலியில் எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேட்டி ஒளிபரப்பானது.
2019ல் ராஜ் டிவி அகடவிகடம் நிகழ்வில் பங்கேற்று பேசியது. தினமணி மற்றும் தினமணி கதிரில் தொடர்ந்து படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தினமணி தமிழ்மணி பகுதியில் (17-8-2008 அன்று) கவிதைநூல் விமர்சனம் புகைப்படத்துடன் வந்துள்ளது.
பல்வேறு கவியரங்கம், பேச்சரங்குகளில் கலந்து கொண்டு தமிழ்ப்பணி செய்து வருகிறார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு திறனூக்க பயிற்சிகள் நடத்தி தன்னம்பிக்கை பேச்சாளராகவும் இருக்கிறார். பல பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் பொதுமுடக்க காலத்தில் காவல்துறையினருடன் இணைந்து டிராபிக் வார்டன் அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பாதுகாப்பு பணிகள் 50 நாட்களுக்கும் மேலாக செய்துள்ளார். அப்பணி….இன்னும் தொடர்கிறது…….
கோவிட் -19 தொற்றுநோய் காலத்தில், நம்மில் பலர் பயனுள்ள வேலைகளைச் செய்தோம். இது அவரவருக்கான வேலை அல்லது வாய்ப்பினைப் பொறுத்தது. இந்த வரிசையில் நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறார் இவர். ஒரு தனியார் கல்லூரி நூலகர் – எழுத்தாளர் - தமிழ்நாடு காவல்துறை போக்குவரத்து காப்பாளராக (மூத்த திட்டமிடல் அதிகாரி, திருப்பூர் நகரம்) ஆகிய பல பரிமாணங்களைக் கொண்ட திரு. எஸ்.ஏ. முத்துபாரதி. இந்த ஒரு வருட காலத்தில் தொடர்ந்து 4 தமிழ் புத்தகங்களை எழுதியுள்ளார்.
ஒவ்வொரு நூலினை எழுதி அச்சாக்கம் செய்து வெளியிட முனையும்பொழுது எல்லாம் பொதுநிகழ்ச்சிக்கான அனுமதி இல்லை எனும்பொழுது மனம் தளராமல் அடுத்தடுத்த நூல்களை எழுதியும் அச்சிட்டும் தயார் நிலையில் வைத்துள்ளார். 4 நூல்களும் வெவ்வேறு வகையினைச் சார்ந்தது என்பது சிறப்பு.
ஒவ்வொன்றும் பங்களிப்பில் தனித்துவமானது. 2019 இறுதியில் முதல்
நூலான “விதிமுறைகள் யாருக்காக?“ எழுதி முடித்தார். முதலில் மார்ச் 2020
அன்று வெளியிடுவதற்கான திட்டம் பொதுமுடக்கத்தால்
ஒத்திவைக்கப்பட்டது.
இந்நூல்
மனிதனுக்கான அனைத்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுடன்
தொடர்புடையது. இந்த புத்தகத்தை மிகவும் பாராட்டி
அணிந்துரை வழங்கியுள்ளார்
திரு. என்.சண்முகம், ஐ.ஏ.எஸ் (ஓய்வு,) மற்றும் திரு. ஆர்.ஜானகிராம் - காவல்
ஆய்வாளர் - போக்குவரத்து - திருப்பூர் தெற்கு மற்றும் திருமதி. மிருதுளா
நடராஜன் - இயக்குநர் - பெண்கள் அதிகாரமளித்தல் பிரிவு - வனம் இந்தியா
அறக்கட்டளை, பல்லடம் ஆகியோர்.
நூலகத்துறை சார்பில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் பங்கேற்க
ராஜஸ்தான் சென்றபொழுது ஏற்பட்ட அனுபவங்களை ( உதய்பூர் மற்றும்
ஜெய்ப்பூர் பயணத்தின் போது கிடைத்த அனுபவங்களை ) தொகுத்து பயணக்
குறிப்பு நூலாக ‘ஒட்டக சவாரி’ – எனும் தலைப்பில்
அடுத்த நூலினையும்
தயார் செய்துவிட்டார். இது இவரது படைப்பின் வரிசையில் 20வது நூலாகும்.
பின்னர் அந்த 2 புத்தகங்களையும் வெளியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அந்த நேரத்தில், அவர் ‘மனித-விலங்கு மோதல் ’ தொடர்பான அனைத்து
செய்தித்தாள் விசயங்களையும்
சேகரித்து வைத்துள்ளார். நூற்றுக்கணக்கான
இந்த செய்திகள் மூலமாக மலைப்பகுதிகளில் விவசாயிகள் எதிர்கொள்ளும்
பிரச்சனைகள் மற்றும் காட்டு விலங்குகளுக்கான
பிரச்சனை ஆகியவை
மனதில் வந்துமோத “அவுட்டுக்காய்“ எனும் தலைப்பில் 3 வது புத்தகத்தை எழுதி
முடித்து அணிந்துரைக்காக இயற்கை ஆர்வலரும் சூழலியல் ஆய்வாளருமான
திரு. கோவை சாதசிவம் அவர்களை
அணுகியபோது, படைப்பினைப் படித்து
வெகுவாக பாராட்டியுள்ளார்.
கோவிட் -19 சிக்கல்கள் காரணமாக 8 மாதங்கள் கடந்துவிட்டதால், அந்த 3 புத்தகங்களையும் வெளியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் ஆடிய கால்களும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்களே அப்படி எழுத்துலகில் ஆர்வம் கொண்ட இவர் தனது வாசகர்களின் வேண்டுகோளான சிறுவர் இலக்கியத்தில் கவனம் செலுத்த முனைந்தார். ஏற்கனவே “எச்சரிக்கை –மனிதர்கள் நடமாடும் பகுதி“ என்கிற சிறுகதை நூலை எழுதியுள்ள இவர், குழந்தைகளுக்காக மற்றொரு சிறுகதை புத்தகத்தை எழுதத் தொடங்கினார். ‘முத்து மாமா கதைகள்’ என்று பெயரிடப்பட்ட இந்த 4 வது புத்தகம் மிகவும் பாராட்டத்தக்கது மற்றும் அற்புதமான புத்தகத்தை அடுத்த தலைமுறையினருக்கு சென்றடைய அனைத்து பள்ளிகளையும் அணுகுமாறு அவருக்கு - திருப்பூர், விவேகானந்த வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் கல்வி ஆலோசகர் முனைவர். திரு. ரங்கசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவர்
பெருந்தொற்று காலத்தில் சும்மா இருக்கக்கூடாது
என பொதுமக்களுக்கு
காவல்துறை
மூலமாக விழிப்புணர்வு அளிப்பதன் மூலமும், வாகன சோதனை
மற்றும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதன்
மூலமும் தொண்டாற்றியுள்ளார். பொதுமுடக்க காலத்தில் விதிவிலக்கு கோரி
செயல்படும் தொழிற்சாலைகள் போதுமான வழிகாட்டுதலுடன் செயல்படுகிறதா
என ஆய்வு செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகத்திற்கு உதவியுள்ளார்.
போக்குவரத்துக் காப்பாளராக பொதுமுடக்க காலத்தில் 50 க்கும் மேற்பட்ட
நாட்கள் சிறப்பு
பணி செய்து சமூக கடமைகளைச் செய்துள்ளார்.இதற்காக
மாநகர காவல் ஆணையரிடம் நற்சான்றிதழ் பெற்றுள்ளார்.
இந்த 4 புத்தகங்கள் உட்பட, தமிழ் இலக்கியத்தில் அவரது மொத்த பங்களிப்பு
27ஆக உள்ளது. இவர்
பறவைகள் மற்றும் விலங்குகள் கணக்கெடுப்பில் ஆர்வம் உள்ளவர்.
2019 ஆம் ஆண்டில் சத்தியமங்கலம் வனசரகம் ஏற்பாடு செய்திருந்த பறவை
மற்றும் பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு பணிகளில் கலந்து கொண்டுள்ளார்.
கிரீன் அன் கிளீன் அமைப்பு சார்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களை வனச்சுற்றுலா
அழைத்துச் சென்று வருகிறார்.
மேலும் இந்த பத்து மாத காலத்தில் தனது நூலகத் துறை சார்ந்தும் பொதுவான
இணையவழி நிகழ்ச்சிகளிலும், ஆளுமை திறனூக்க பயிற்சிகளிலும் கலந்து
கொண்டுள்ளார். பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச அளவில் 175 க்கும்
மேற்பட்ட ஆன்லைன் வகுப்புகளில்
பங்கேற்று சான்றிதழ் பெற்றதோடு ,
சிலவற்றில் சிறப்புரை நிகழ்த்தியும் உள்ளார். இணையவழியில் நடந்த
கட்டுரை போட்டி மற்றும் நூல் அறிமுகம் ஆகிய போட்டிகளில் முதல் மற்றும்
இரண்டாம் பரிசுகள் பெற்றுள்ளார்.
பணிபுரியும் இடத்திலும் 1910 க்கும் அதிகமான நூல்களை ( இரண்டு இலட்சம் மதிப்பிற்கும் மேலான நூல்கள் ) நன்கொடையாகப் பெற்று நூலகத்தில் சேர்த்துள்ளார். கல்லூரி மாணவர்களுக்கான “குறிஞ்சி“ மாணவர் இதழ் ஒன்றையுடம் நடத்தி வருகிறார். ரீடர்ஸ் கிளப் மூலமாக மாணவர்களுக்கு பயனுள்ள செய்திகளை உடனுக்குடன் வழங்கிய தனியாக வாட்சப் குழுவில் செய்திகளை பகிர்ந்து வருகிறார். மாணவர்களின் கவிதை , கட்டுரை, ஓவியம் போன்ற படைப்புகளைப் பெற்று மாணவர் இதழில் இடம்பெறச் செய்து ஊக்கப்படுத்தி வருகிறார்.
இவ்வளவு பெருமைக்குரிய இவரை சிறந்த நூலகர், சிறந்த போக்குவரத்துக் காப்பாளர் அல்லது சிறந்த எழுத்தாளர் என எப்படிக் குறிப்பிடுவது என்பதே நம்முன் உள்ள கேள்வி.


